Certificate Courses

Application form

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (PME-1) துறை கடிதம் எண். 2390/PME-1/2025-2 நாள் 02.09.2025-ன் படி 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளத்தில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன:-

1. வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகள்:

 பாடப்பிரிவின் பெயர்
(i)Emergency care Technician
(ii)Respiratory Therapy Technician
(iii)Dialysis Technician
(iv)Anaesthesia Technician
(v)Theatre Technician
(vi)Orthopaedic Technician
(vii)Multi Purpose Hospital worker

2. காலியிடங்கள்:

இம்மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக 178 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் www.kgmc.ac.in  வலைதளத்திலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் கிடைக்கப்பெறும்.

வ.எண்பாடப்பிரிவின் பெயர்OCBCBCMMBC/DNCSCSCASTமொத்த காலியடங்களின் விவரம்
(i)Emergency care Technician–52441–16
(ii)Respiratory Therapy Technician551431–19
(iii)Dialysis Technician–4–22––8
(iv)Anaesthesia Technician–10174––22
(v)Theatre Technician1111982–32
(vi)Orthopaedic Technician1091751134
(vii)Multi Purpose Hospital worker121321081147
 Total28578433462178

3. தகுதி:

(i)31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.  அதிக பட்ச வயது உச்ச வரம்பு இல்லை.
(ii)மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (தேர்வுக்குழு பரிந்துரையின்படி), பல்வகை மருத்துவப்பணியாளர் படிப்புக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
(iii)இட ஒதுக்கீடு: சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

4. விண்ணப்பிக்கும் முறை (கட்டணமில்லை):

மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையத்திலும், கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் / துணை முதல்வர் அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்படும். உரிய முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 12.09.2025 அன்று அல்லது அதற்கு முன்னர், முதல்வர் / துணை முதல்வர் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.

5. அட்டவணை

விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்08.09.2025 ஆம் நாள் முதல் 12.09.2025 ஆம் நாள் வரை
தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள்16.09.2025
பாடப்பிரிவில் சேரும் நாள்20.09.2025
நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள் (மீதமுள்ள மாணவர் சேர்க்கை இடங்களுக்காக)22.09.2025 லிருந்து
முழு மாணவர் சேர்க்கை செயல்முறை நிறைவுப்பெறும் நாள்30.09.2025
வகுப்புகள் தொடங்கும் நாள்06.10.2025

6. கலந்தாய்வு நடைபெறும் இடம்:

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம்.

7. தேவைப்படும் ஆவணங்கள்:

  1. மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  2. மாற்று சான்றிதழ்
  3. இருப்பிடச் சான்றிதழ் (பொருந்துமாயின்)
  4. சாதிச் சான்றிதழ்
  5. வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ் / பள்ளிச் சான்றிதழ்)
  6. மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்)
  7. ஆதார் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை

8. தெரிவு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும். கலந்தாய்வின் போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும்.

9. சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் அடிப்படையிலான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பை தகுதியுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

10. இந்தப் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு, ”வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.