கன்னியாகுமரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை துறையின் சார்பில், நரம்பு சுருட்டு மற்றும் நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு லேசர் மற்றும் கதிரியக்க சிகிச்சை மூலம் எளிதாக சிகிச்சை செய்யும் கருத்தரங்கு 09/05/2025 அன்று கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் , பொது அறுவை சிகிச்சை துறையின் தலைவர், உறைவிட மருத்துவ அலுவலர் மற்றும் துணை உறைவிட மருத்துவ அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.
கருத்தரங்கை மருத்துவமனை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.
இக்கருத்தரங்கில் மேற்கூறிய சிகிச்சை முறைகள் பொது மருத்துவர்கள் , முதுநிலை மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் செய்முறை பயிற்சி முறையில், இரத்த நாள சிகிச்சை மருத்துவர்கள் மரு.ராஜேஷ் மற்றும் மரு. நோபில் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் லேசர் மற்றும் கதிரியக்க சிகிச்சை முறைகள் மூலம் கன்னியாகுமரி பகுதியை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் , நமது கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெறலாம். மேலும் கருத்தரங்கில் மரு.மருதுபண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இக்கருத்தரங்கில் 50 முதுநிலை மருத்துவ மாணவர்கள்,மருத்துவர்கள் மற்றும் 250 மருத்துவ மாணவர்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்.

