World Asthma day

உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு மாதமும் மே மாதம் முதல் செவ்வாய் உலகம் முழுவதும் உலக சுகாதார நிறுவனத்தால் மக்களுக்கு ஆஸ்துமா பற்றிய விழிப்புண்வு ஏற்படுதும் வகையில் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கல்லூரி யில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பாக இன்று உலக ஆஸ்துமா தினம் நிகழ்ச்சிகள் அனுசரிக்க பட்டது. அதில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமலெட்சுமி தலைமையில் நெஞ்சக நோய் துறை மருத்துவதுறை மருத்துவர்கள் பொது மக்களுக்கு விழி்புணர்வு வழங்கினர்.

ஒவ்வொரு வருடமும் 260 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் ஆஸ்த்மாவினல் பாதிக்கப்படுகின்றனர். அதில் 45 லட்சம் பேர் நோயின் தீவிரதன்மையால் உயிர் இழக்கின்றனர் . இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 3.4 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது உலகளவில் 13 %. ஆஸ்துமா நோய் வருவதற்கான காரணம், அதன் அறிகுறிகள், அதற்க்கான சிகிச்சைமுறை, இன்ஹேலர் சிகிச்சையின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புண்வு ஏற்படுத்துவது இந்த ஆஸ்துமா தினத்தின் நோக்கமாகும் .Inhaler சிகிச்சை அனைவருக்கும் எளிதில் கிடைக்க செய்வது இந்த வருட ஆஸ்துமா தினத்தின் கரு பொருளாகும்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கல்லூரியில் வருடத்திற்கு 500 கும் மேற்பட்ட நோயாளிகள் ஆஸ்துமாவால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் . அதற்க்கான இன்கேலர் (inhaler) மருந்துகள் நம் மருத்துவ மனையில் தேவையான அளவு கிடைக்கிறது. 24 மணி நேரமும் இந்த நோய்க்கு நமது கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காளிப்பாளர் மரு. கிங்ஸ்லி ஜெபசிங் , உறைவிட மருத்துவர் மரு. விஜயலட்சுமி, மரு.ரெனிமோள் , துறைதலைவர் மரு. முத்துகுமார், உதவி பேராசிரியர்கள் கார்த்திகா, ஆல்பர் , நான்சி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *